
இந்தியத் தத்துவார்த்த இயற்பியலாளர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரியல் அல்லாத இயக்கவியல் மையத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இராமண்ணா ஆய்வாளர் ஆனவர் முத்துசாமி லட்சுமணன். இவர் இராசா இராமண்ணா ஆய்வு நிதியுதவி உள்ளிட்ட பல ஆய்வு நிதியுதவியினைப் பெற்றுள்ளார். இவரது நேரியல் அல்லா இயக்கவியல் மற்றும் முரளி-லட்சுமணன்-சுவா (எம்.எல்.சி.) சர்க்யூட் வளர்ச்சி அதிகமாக இயற்பியல் ஆராய்ச்சியாளர்களிடம் நன்கு அறியப்பட்டது. மாவட்டம் பொள்ளாச்சியில் 1946ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் நாள் பிறந்தார் முத்துசாமி லட்சுமணன். பொள்ளாச்சியில் உள்ள என்ஜிஎம் கல்லூரியில் அறிவியலில் பட்டமும், 1969ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றார் (எம்எஸ்.சி). கோட்பாட்டு இயற்பியலில் எம்.எஸ்.சி-க்கு பிந்தைய ஆய்வுகளைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் இளம் விஞ்ஞானிகள் விருது மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ராமன் ஆராய்ச்சி பரிசுகளை பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த பல்கலைக்கழக ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார். 1989 முதல் 1992 வரை உயர் கணிதத்திற்கான தேசிய வாரியத்திலும் முக்கியப் பங்காற்றிய முத்துசாமி லட்சுமணன் பிறந்த தினம் இன்று..!
