• Thu. Jan 23rd, 2025

இந்த நாள்

Byகாயத்ரி

Mar 21, 2022

தொழிலதிபர் நா. மகாலிங்கம் பிறந்த தினம் இன்று..!

தமிழகத் தொழிலதிபரும், மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும் ஆனவர் நா. மகாலிங்கம் . பொள்ளாச்சியை சேர்ந்த இவர், சக்தி குழுமத்தின் அதிபர். பொள்ளாச்சி மகாலிங்கவுண்டர் என்றும் அழைக்கப்படுவார். நாச்சிமுத்து கவுண்டருக்கும், ருக்மணி அம்மையாருக்கும் பிறந்தவர் நா.மகாலிங்கம். அவரது தாத்தா பழனிக்கவுண்டர் பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர். பொள்ளாச்சியில் பள்ளி கல்வி முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தை பெற்ற பின், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்தார். மகாலிங்கம் அவரது தந்தை நாச்சிமுத்துவும் மாட்டுவண்டிகளில் தொழில் தொடங்கி, உயர்ந்து வந்தனர். பின் 1931ல் ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட்(ஏ.பி.டி) என்று தொடங்கிய நிறுவனம், சக்தி குழுமத்தின் நிறுவனங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. 21 பேருந்துகளுடன் தொடங்கிய ஏ.பி.டி நிறுவனம் 1946ல் 100 பேருந்துகளை கொண்ட பெரிய நிறுவனமாக வளர்ந்தது. 1934ல் மகாலிங்கத்தின் தந்தை நாச்சிமுத்து, மகாத்மா காந்தியை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தார். அப்பொழுது காந்தியைச் சந்தித்த மகாலிங்கம் சிறு வயதிலிருந்தே விடுதலை பற்றிய விழிப்புணர்வு கொண்டிருந்தார்.அதன் பின் மகாலிங்கம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற 29 வயது இளைஞராரவும் திகழ்ந்தார். 969 முதல் தீவிர அரசியலில் இருந்து விலகி, சமூக முன்னேற்றத்திற்காகக் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிப் பணிகளில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இக்குழுமத்தில் பல தொழில்கள் வளரந்தது. இவர்களின் பெயர் இல்லாத தொழில் வர்த்தகமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி பல தொழில்களை உயர்த்தி வந்த நா. மகாலிங்கம் பிறந்த தினம் இன்று..!