ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்ற கணிதவியலாளர், இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1629).
கிறிஸ்டியான் ஹைகன்ஸ் (Christiaan Huygens) ஏப்ரல் 14, 1629ல் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் பிறந்தார். லைடன் பல்கலைக்கழகத்தில் சட்டம், மற்றும் கணிதம் படித்தார். அதன் பின்னரே அறிவியல் படிக்க ஆரம்பித்தார். ஹைஜன்ஸ் தொலைநோக்கியின் கண்வில்லையைக் கண்டறிந்தார். அதனைக் கொண்டு வான்பொருள்களை நுட்பமாக ஆய்வு செய்தார். இன்றளவும் விலை குறைந்த தொலை நோக்கிகளில் பயன்படுத்தப்படும் எளிய கண்வில்லை ஹைஜன்ஸ் வடிவமைத்ததே ஆகும். ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை காரணமாக உலக அளவில் அவர்பால் கவனம் ஈர்க்கப்பட்டது. ஹைகன்ஸ் கூறிய கருத்து, ஒளியானது துகள் (particle) மற்றும் அலை (wave) என இருமைப் பண்பு கொண்டது என்ற அலை-துகள் இரட்டைத்தன்மையைப் பின்னர் விளக்க உதவியது. “ஓர் அலை முகப்பின் ஒவ்வொரு புள்ளியும் இரண்டாம் கட்ட சிற்றலைகளின் ஆரம்பப் புள்ளியாகக் கருதலாம். இப்படித் தோன்றும் இரண்டாம் கட்டச் சிற்றலைகள் அனைத்துத் திசைகளிலும் சீராக முதல் அலையின் வேகத்திலேயெ பயணிக்கும்” என்பது ஹைஜென்ஸின் புகழ் பெற்ற கண்டுபிடிப்பாகும். இதனை ஹைஜன்ஸ் தத்துவம் என்று அழைக்கிறார்கள்.


1655ம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார். புதன் கோளை விட பெரியதான இது சூரியக் குடும்பத்தின் துணைக்கோள்களில் மிகப்பெரிய துணைக்கோளாகும். இதற்கு முன் பெரிய துணைக்கோளாக வியாழனின் “கானிமீட்” இருந்தது. அத்துடன் சனிக் கோளின் வளையங்களை ஆராய்ந்து அவை சிறு சிறு பாறைகளினால் ஆனவை என்பதை 1656ல் கண்டறிந்தார். அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பிய டைட்டன் பற்றிய வானவியல் ஆய்வுக்கான இறங்கு கலனிற்கு டைட்டனைக் கண்டறிந்த ஹைஜன்ஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியின் வளி மண்டலம் பல இலட்சக்கணக்காண ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அது போல அடர்ந்த வளிமண்டலத்தைக் கொண்ட டைட்டனை ஆய்வு செய்ய இக்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
ஹைஜன்ஸ் 1659ம் ஆண்டில் ஓரியோன் என்ற தொலை விண்மீன் தொகுதியை (Nebula) ஆய்வு செய்து அதன் மாதிரிப் படத்தையும் வரைந்தார். ஓரியான் தொகுதியின் முதல் வரைபடமாக விளங்குவது இவரது ஓவியமே ஆகும். அவரது தொலைக்காட்டியின் மூலம் ஓரியான் வாயுத்திரளின் வேறுபட்ட பகுதிகளைப் பிரித்துக் குறிப்பிட்டு அதனைக் குறித்த தெளிவான விளக்கங்களை 17ம் நூற்றாண்டிலேயே வகுத்துக் கொடுத்தார். இப்பணியைப் போற்றும் விதமாக ஓரியோன் திரளின் ஒளிமிக்க நடுப்பகுதிக்கு இவரது நினைவாக “ஹைஜன்ஸ் பகுதி” எனப் பெயரிடப்பட்டது. காலத்தைக் கண்டறிய உதவும் ஊசல் கடிகாரத்தைக் கண்டு பிடித்தவரும் ஹைஜன்ஸ் தான். நெகிழக்கூடிய ஒரே ஆதாரத்தில் கட்டப் படக்கூடிய இரு ஊசல் குண்டுகளில் ஒன்றை மட்டும் இயக்கினாலும் அந்த இயக்கம் அடுத்த ஊசல் குண்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒத்த அதிர்வும், எதிர் அதிர்வும் மாறி மாறி நிகழ்வதையும் இவர் கண்டுபிடித்தார். பரிவதிர்வு ஊசல் என்ற இது இன்றும் அறிவியல் மையங்களில் காணப்படுகிறது.
ஐசாக் நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியை இருபடிச் சமன்பாடாக மாற்றி எழுதியவரும் இவரே. இலாய்சி பாஸ்கலின் வேண்டுகோளுக்கிணங்க நிகழ்தகவுத் தத்துவம் குறித்த ஒரு நூலை எழுதி 1657ம் ஆண்டில் வெளியிட்டார். தற்காலத் தொகையீட்டு மற்றும் வகையீட்டு நுண்கணித வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்ற கிறிஸ்டியான் ஹைகன்ஸ் ஜூலை 08, 1695ல் தனது 66வது அகவையில் ஹேக், டச்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]