• Wed. Jun 7th, 2023

ராஜேஸ்வரி சாட்டர்ஜி பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Jan 24, 2022

இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் என கருதப்படுபவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள நஞ்சன்கூடு பகுதியில், 1922 ஜன.24ல் பிறந்தார்.

கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்று ஐ.ஐ.எஸ். என்ற இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் மின்னியல் துறையில் ஆராய்ச்சியாளராக இணைந்தார். இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி’ என்ற பெருமை பெற்றார்.நுண்ணலை, உணர் பொறியியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி இருக்கிறார்.

அரசின் உதவியுடன், ஆராய்ச்சி படிப்பு பயில, 1947ல் அமெரிக்கா சென்றார். மெக்சிகன் பல்கலையில், மின்னியல் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஐ.ஐ.எஸ்., நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.

தன் கணவர் சிசிர்குமார் சாட்டர்ஜியுடன் இணைந்து, நுண்ணலை ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தை நிறுவினார்.100க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் மற்றும் நுண்ணலைகள், உணர் பொறியியலில், ஆறு நுால்கள் எழுதியுள்ளார். பிரிட்டனின், ‘மவுன்ட்பேட்டன்’ விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். இத்தகைய பெருமை மிகுந்த விஞ்ஞானி ராஜேஸ்வரி சாட்டர்ஜி பிறந்த தினம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *