• Mon. May 29th, 2023

கி.வீரமணி பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 2, 2021

தென் ஆற்காடு மாவட்டம், கடலூர் அருகே பழையபட்டினத்தில் வாழ்ந்த சி. எஸ். கிருஷ்ணசாமி மீனாட்சி தம்பதியருக்கு டிசம்பர் 2, 1933 அன்று மூன்றாவது மகனாக பிறந்தவர் வீரமணி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி.தன் 12 வயதில் காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட முதலாவது திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றினார்.

17 வயதிற்குள் கலந்து கொண்ட நிகழ்வுகள் 227, கலந்து கொண்ட மாநாடுகள் 16, பயணம் செய்த தூரம் 23422 கி.மீ. 23 வயதில் முதுகலை வகுப்பினை முடித்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 25 வயதில் கடலூர் திராவிடநாடு பிரிவினை மாநாட்டிற்கு வருகை புரிந்தோரின் உடைமைகளைப் பாதுகாக்கும் பணியினைச் செய்தார்.

இளம் வயதிலேயே, ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளை, மேடைகளில் பேசத் துவங்கினார். வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தி.க.,வின் பொதுச் செயலரானார். ‘மிசா’ சட்டத்தில் கைதாகி, ஓர் ஆண்டு சிறை வாசம் அனுபவித்தார். 1998ல், ‘ஈ.வெ.ரா., பிஞ்சு குழந்தைகள்’ இதழைத் துவக்கி, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

கடந்த ‘பெரியார் மணியம்மை’ பல்கலை உள்ளிட்ட, ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளுடன், பகுத்தறிவு சம்பந்தமான எண்ணற்ற நுால்கள் எழுதியுள்ளார். ராமர் படம் எரிப்பு, ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.இத்தகைய புரட்சியை மேற்கொண்ட கி.வீரமணி பிறந்த தினம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *