• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஏ.இ.முத்துநாயகம் பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Jan 11, 2022

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் ஒரு முன்னணி விண்வெளி விஞ்ஞானி மற்றும் இந்தியாவில் ஏவூர்தி உந்துதலின் பிரதான கட்டமைப்புக் கலைஞர் முனைவர் ஏ.இ.முத்துநாயகம். திரவ இயக்கத் திட்ட மையத்தை உருவாக்கியதில் இவர் முக்கியப் பொறுப்பு வகித்தார். 1960ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பொறியியல் (இயந்திர) பட்டத்தை முதல் வகுப்பு பெற்றார்.

இவர் தனது முதுகலைப் பட்டத்தினை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிலையத்தில் 1962இல் சிறப்புத்தகுதியுடன் பெற்றார். 1965ஆம் ஆண்டில் அமெரிக்காவின் புர்டூ பல்கலைக்கழகத்தில் உள்ள எந்திரப் பொறியியல் பள்ளியிலிருந்து முனைவர் பட்டம் பெற்றார்.

இப்படி பல பட்டங்களை பெற்ற முத்துநாயகம் 1975இல் கேரள பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பினையும் முடித்தார்.இந்தியாவில் உந்துவிசை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இவர் செய்த குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளுக்காக, இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் உந்துவிசை தொழில்நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். புவி அறிவியல் துறை அமைச்சக செயலாளராகவும் பதவி வகித்தார்.

கேரள அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் குழும நிர்வாக துணைத் தலைவராகவும் இவர் பணியாற்றினார். 2005 முதல் 2008 வரை சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஆட்சிக் குழுவின் தலைவராக பணியாற்றினார். 1961ஆம் ஆண்டின் ஐ.ஐ.டி சட்டத்தின் பிரிவு 11 ன் கீழ் இவர் இப்பதவியில் நியமிக்கப்பட்டார். இது இந்தியா முழுவதும் உள்ள ஏழு இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒவ்வொன்றிற்கும் ஆளுநர் குழுவின் அமைப்பைக் குறிப்பிடுகிறது.இப்படி பல்வேறு பதவிகளையும் பணிகளையும் ஆற்றிய ஏ.இ.முத்துநாயகம் பிறந்த தினம் இன்று..!