

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் போராடும் என்று தெரிகிறது. எனவே இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும். துபாயில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.