• Thu. Apr 18th, 2024

வீடுகளுக்கான கட்டணத்தை குறைக்க
ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சிறு நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது போல வீடு, கடைகளுக்கான மின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாழ்வழுத்த மின் இணைப்பு கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் மின் கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக கட்டணம் குறைக்கப்படுவதால் தொழில் நிறுவனங்களை ஓரளவு சிரமமின்றி நடத்த முடியும்.
இவ்வாறு சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைத் தமிழக அரசு குறைத்திருப்பது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதே நேரம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வீடு, கடைகளுக்கான மின் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த மின் கட்டணத்தையும் குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஏற்கனவே சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றை தமிழக அரசு உயர்த்தியதால் மக்கள் மீதான பொருளாதார சுமை கூடியுள்ளது.
எனவே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது போல வீடு, கடைகளுக்கான மின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே தமிழக அரசுக்கு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது அக்கறை இருக்குமேயானால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது போல வீடு, கடைகளுக்கான மின் கட்டணத்தையும் குறைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *