• Sat. Apr 20th, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு முடிவுகள்.. தேதி வெளியீடு..

ByA.Tamilselvan

Sep 29, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ, மற்றும் குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வு நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். அதேபோல் குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வை லட்சக்கணக்கானவர்கள் எழுதினர். இந்த நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *