புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி திருவப்பூர் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு முதன்முதலில் கல்வி மற்றும் எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் ‘வித்யாரம்பம்’ எனப்படும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து அழகு பார்த்தனர் அந்த வகையில் புதுக்கோட்டையில் பிரபலமான பள்ளியின் ஒன்றான மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாங்கள் குழந்தைகளின் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் தங்கமூர்த்தி மற்றும் பெற்றோர்கள்தங்கள் குழந்தைகளை நெல்மணிகளின் அருகில் அமர வைத்து அ எழுதி மகிழ்ந்தனர்.

பின்னர் குழந்தைகளை மைதானத்தில் விளையாட வைத்து உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்ச்சிகள் சுற்றுகின்ற கிராமத்து பெருமக்களும் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



