• Wed. Oct 21st, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்குவது குறித்து கருப்பையாஎம்எல்ஏ விவசாய சங்கபிரதிநிதிகளுடன் ஆலோசனை..,

ByKalamegam Viswanathan

Oct 21, 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் உள்ள நிலையில் சோழவந்தான் MLA கருப்பையா, தலைமையில் கரும்பு விவசாயிகள் ,அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பது குறித்தும், கரும்பு பயிரிடப்படும் விவசாயிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. அலங்காநல்லூர் மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த MLA கருப்பையா பேசியதாவது,

மூன்று மாத காலம் அல்லது நான்கு மாத காலத்திற்குள் கரும்பு உற்பத்தி பணிகளை துவக்குவதாக விவசாயிகள் உறுதியளித்துள்ளனர்.

மற்ற பொருட்கள் விலை ஏறி, இறங்குவது போல் இல்லாமல் கரும்புக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயித்துள்ளது.

கரும்புக்கு டன்னுக்கு நான்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தி கொடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே ஆலை 3 மாதம் மட்டும் செயல்படாமல் தொடர்ந்து 6 மாதகாலம் ஆலை இயங்க விவசாயிகள் ஆர்வத்துடன் உள்ளனர். கடந்த கால ஆட்சியாளர்கள் ஆலையை சிறுமைப்படுத்தியதால் சர்க்கரை ஆலை இயங்கவில்லை ஆனால் தற்போது தமிழக முதல்வர் மக்கள் எதை விரும்புகிறார்களோ அந்த மாற்றத்தை தரவேண்டும் என்பது தான் முதல்வரின் விருப்பம் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் தான் எடப்பாடி.

இரு பெரிய கட்சிகள் பெரிய கட்சிகள் இல்லை என மக்கள் முடிவெடுத்து தமிழக வெற்றிக்கழகம் தான் மிகப்பெரிய கட்சி என மக்கள் தீர்ப்பளித்துவிட்டனர்.

2019 எடப்பாடி முதல்வராக இருந்த போது தான் இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டது.

சர்க்கரை ஆலை பத்தி அவர் பேசவில்லை ஆனால் போதைப்பொருள் கடத்தல் குறித்து பேசுகிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.

மிகப்பெரிய ஆளுமை மிக்க ஆலமரமாய் இருந்த அதிமுக தற்போது முருங்கை மரமாய் மாறி வரக்கூடிய பெருமை எடப்பாடியாருக்கு தான் உண்டு காலத்தின் கட்டாயம் அவருக்கு பதில் சொல்லும் சர்க்கரை ஆலையை திறப்பது குறித்து மாவட்ட அமைச்சரிடம் கலந்து பேசி அதன் பிறகு கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு தமிழக முதல்வரை சந்தித்து சர்க்கரை ஆலை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என பேசினார்.