• Tue. Mar 19th, 2024

ரஷ்யாவுடன் இணையும் உக்ரைனின் 4 பிராந்தியங்கள்

ByA.Tamilselvan

Sep 29, 2022

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சிக்க வில்லை. மேலும் அமெரிக்கா போன்று நாடுகள் உக்ரைனுக்கு போர் தளவாளடங்களை அளிப்பதன் மூலம் போரை முடிவுக்குகொண்டுவர விரும்பவில்லை என தெரிகிறது. இந்நிலையில் உக்ரைனை சேர்ந்த 4 பிராந்தியங்களை அதிகாரப்பூர்வமாக தன்னுள் இணைத்துக்கொள்ள இருக்கிறது ரஷ்யா . இது தொடர்பாக அந்தபகுதி மக்களிடம் பிராந்தியத் தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பு நடத்தினர். அதில் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தங்களை ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ள பிராந்தியத் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்த இணைப்பை ரஷ்ய அதிபர் புதின் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *