தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவிக்கான மெயின் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் நிர்வாக காரணங்களால் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.











; ?>)
; ?>)
; ?>)