• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கேரள மாநிலத்தின் பெயரை மலையாள மொழியில் ‘கேரளம்’ என மாற்றம்..,

‘கேரளம்’ என மாற்றக் கோரி, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ எனத் திருத்தம் செய்யக் கோரிய இந்த முன்மொழிவுக்கு தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் பச்சைக்கொடி காட்டவுள்ளது.

தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, ‘கேரளா’ இனி அனைத்து அரசு ஆவணங்களிலும் ‘கேரளம்’ என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும்.