• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கம்யூனிஸ்ட் தோழர் நல்லகண்ணு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..,

ByKalamegam Viswanathan

Feb 26, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மறைந்த தோழர் நல்லகண்ணு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஜோதி ராமலிங்கம் தலைமை வகித்தார்.

விவசாய சங்க பொருளாளர் காசி சேது செல்வம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திமுக சார்பாக சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் பேரூராட்சி கவுன்சிலர் கொத்தாளம் செந்தில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஐயப்பன் செங்குட்டுவன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.