• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உயர்மட்ட பாலத்தினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த அமைச்சர்..,

ByK Kaliraj

Feb 26, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூபாய் 17.68 கோடி மதிப்பில் உயர் மட்ட பாலம், சுகாதார வளாகங்கள் குளியலறை, உள்ளிட்ட ஆறு கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன, இந்த பணிகளானது நிறைவு பெற்ற நிலையில் அதன் திறப்பு விழாவானது நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியினை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்,

அதனைத் தொடர்ந்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் சென்று உயர்மட்ட பாலத்தினை ரிப்பன் வெட்டியும், தொடங்கி வைத்தார். மேலும் புதிய கட்டடப் பணியை குத்துவிளக்கு ஏற்றியும் ஆறு பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி , சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், மற்றும் அரசு அதிகாரிகள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.