• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஆத்தாடி ஒரு வருஷத்தில் இத்தனை டன்னா?.. அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்!

Cabbage

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2021வரையில் சராசரியாக தினசரி, 14டன் கொரோனா கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், வீடுகள் மற்றும் ஆய்வகங்களில் உருவாகும் கொரோனா கழிவுகள், பொது மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனங்களால் முறையாக சேகரிக்கப்பட்டு, மருத்துவக்கழிவுகளை எரிப்பதற்கு கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள எரிப்பானை பயன்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இந்த வகையில் 14டன் கொரோனா கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாகவும் கொரோனா அல்லாத மருத்துவக்கழிவுகள் 35டன் அகற்றப்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளனர்.