சுபமுகூர்த்த நாள் முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் திருமணஜோடிகள் வருகை அதிகரிப்பு.

உலக பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கம். அதிலும் விஷேச தினங்களில் வெளிநாட்டு, வெளிமாநில பக்தர்கள் வருகை கூடுதலாக காணப்படும். மேலும் திருமணம் போன்ற வைபவங்கள் அன்று கூட்டம் அதிகமாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொள்வதை புண்ணியமான காரியமாக கருதப்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் நிறைய திருமண மண்டபங்கள் உண்டு. இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் கோயில் முன் மாலை மாற்றி,தாலி கட்டுக்கொள்ள திருமண ஜோடி ஏராளமானோர் குவிந்திருந்தனர். மேலும்கோயில் உள் பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.திருமணம் முடிந்ததும் மணமக்கள் முருகபெருமானை தரிசித்து சென்றனர்.
