மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செந்தில் பாலாஜி கூறும்போது.மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ஜனவரி 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1.50 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். இன்னும் 75 லட்சம் மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க வசதியாக நடமாடும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.