• Sat. Apr 26th, 2025

மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்வு

Byவிஷா

Jan 29, 2025

தமிழ்நாடு முழுவதும் உள்ள மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை மே மாதம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி பிப்ரவரி முதல் சென்னையில் சில பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 10 நிலை கொண்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது..,
2 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணம் 4 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 ரூபாயும், 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 7 ரூபாயும், 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கிலோ மீட்டரிலிருந்து 18 கிலோ மீட்டர் வரை பயணிப்பதற்கு டிக்கெட் கட்டணம் 9 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக 18 கிலோ மீட்டரில் இருந்து 20 கிலோ மீட்டர் வரை உள்ள பயணத்திற்கு டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மினி பேருந்துகளுக்கான புதிய கட்டண முறை இந்தாண்டு மே 1 முதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.