• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சிவகாசி அருகே கோர விபத்தில் வாலிபர் சாவு 17 பெண்கள் படுகாயம்..,

ByK Kaliraj

Oct 13, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் தனியார் சோப் கம்பெனி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று வழக்கம் போல் கன்னித்தேவன்பட்டி பகுதியிலிருந்து 17 பெண்கள் வேலைக்கு செல்வதற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆலங்குளத்தில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் வேன் சென்று கொண்டிருந்தது அப்போது கல்லம நாயக்கன்பட்டி வினோபா காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது33 ) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்ற போது வேன் வாலிபர் மீது மோதி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது .இந்த விபத்தில் கருப்பசாமி உள்பட 17 பேர் காயம் அடைந்தனர் . காயம் அடைந்த கருப்பசாமியை மீட்ட போது உயிரிழந்து தெரிந்தது . காயமடைந்த பெண்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.