அசோக்செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் மன்மத லீலை. இத்திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி உள்ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது இந்த டிரைலரைப் பார்த்த ரசிகர் இது அந்த மாதிரி படமா என கேட்டு வந்தனர். இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெங்கட்பிரபு, ஒரு சாதாரண மனிதன் நான் வாழ்க்கையில் செய்யும் சிறிய தவறு அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை ஜாலியாக, காமெடியாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். இது அடல்ட் படம் தான் இந்த படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்து இருக்காங்க. ஆனால் படத்தில் முகம் சுளிக்கும் அளவுக்கு விரசம் இருக்காது என்று சத்தியம் செய்யும் அளவுக்கு பேசிஇருந்தார்.
வெங்கட்பிரபு என்னத்தான் சமாதானம் செய்தாலும், ஆண்கள் என்றால் கேவளமானவர்களா என நெட்டிசன்கள் கேள்விக்கேட்டு வருகின்றனர். நெட்டிசன்களின் கமெண்டைப்பார்த்த எஸ்.ஜே.சூர்யா, சார் இது எல்லாம் வெங்கட்பிரபுவின் சேட்டைகள் என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, இந்த சேட்டைக்கான விதை நீங்க போட்டது எனக் குறிப்பிட்டு,லவ் யூ சார் எனப் பகிர்ந்துள்ளார். இந்த வம்பில் எஸ்.கே.சூர்யாவை நைசாக கோர்த்துவிட்டுள்ளார்.