வை ராஜா வை, 3 ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா. சமீபத்தில் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்தார். இதனையடுத்து, இவர் பயணம் என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். மூன்று மொழிகளில் சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்ட இப்பாடல் வைரலானது.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஓம் சாந்தி சால் என்ற பாலிவுட் படத்தைத் தான் இயக்கவுள்ளதாகவும், இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.