• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

20 வருட பகை மறந்து இணையும் இரு நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார்! சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்ற போதிலும் வசூல் சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து அதே கூட்டணியில் அஜித் ஏகே 61 படத்தில் நடிக்க உள்ளார். பின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 63 படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அப்படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிவாவுடன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளாராம். இதற்கு முன்பு பல படங்களில் இணைந்து நடித்த அஜித் மற்றும் வடிவேலுவுக்கு இடையே ராஜா என்ற படத்தில் நடிக்கும்போது சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். அதனைத் தொடர்ந்து இருவரும் எந்த படங்களிலும் ஒன்றாக நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு பழைய பகையை மறந்து ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.