• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திருவூர் அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தேர் பவனிவிழா..,

ByKalamegam Viswanathan

Sep 20, 2026

திருவூர் அன்னை வேளாங்கண்ணி மாதா மூன்றாம் ஆண்டு திருத்தேர் பவனிவிழா மிக விமரிசையாக நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் ( எ) குட்டி மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் கலந்துக் கொண்டனர் ,

அன்னை வேளாங்கண்ணி அலங்கார ஆடம்பர கொடியை ஏற்றியும் தேர் திரு உலா பவனியை பாதர் ரெவரன்ட் வழக்கறிஞர் முனைவர் திருவள்ளூர் மாவட்ட திசா குழு உறுப்பினர் சி.வி.எம்.ரமேஷ் அவர்கள் தொடங்கிவைத்து வேளாங்கண்ணியில் எடுத்து வரப்பட்ட தீர்த்தத்தை பக்கதர்களுக்கு தெளித்து ஆசிர்வதித்தார் பின்பு மாதா வேளாங்கண்ணி வீதிவீதியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சீர் செய்து வழிப்பட்டனர் இரவு 10 மணிக்கு ஆரம்பித்த திரு ஊர்வலம் மறு நாள் காலை 7 .00 மணிக்கு முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் 1000 மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டனர். முன்னதாக விழாவில் திருவூர் சூப்பர் கிங்ஸ் சிலம்பம் குழுவில் கலை நிகழ்ச்சிகள் மேலும் கரடி பானா கரடி வேடம் போட்டு நடனமாடிய கலைஞர்கள் அனைவரையும் கவர்ந்தனர்.

நிகழ்சிக்கு த.வெ.க ஒன்றிய செயலாளர் விஜயகுமார், சிலம்பம் துரைராஜ் ( எ) சுந்தர் மற்றும் அன்னை மாதா வேளாங்கண்ணி ஆலய பூசாரி ஹேமநாத் அவர்கள் வழிபாடு செய்த பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் வழிப்பாட்டு மாலைகளை அன்னைக்கு வழங்கினார்.