உசிலம்பட்டிக்கு வரும் முதல்வர் விஜய் – செக்கானூரணி புதிய பேருந்து நிலையத்திற்கு பி.கே.மூக்கையாத்தேவர் பெயர் சூட்ட வேண்டும் என பார்வட் ப்ளாக் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.,

28 ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை துவக்கி வைக்க வருகை தரும் முதல்வர் விஜய், மதுரை – செக்கானூரணி புதிய பேருந்து நிலையத்திற்கு பி.கே.மூக்கையா தேவர், பெயரினை சூட்ட வேண்டும் என உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவும், அகில இந்திய பார்வட் தலைவருமான பி.வி. கதிரவன், தென்னிந்திய பார்வட் ப்ளாக் தலைவர் திருமாறன் ஜீ, நேதாஜி சேனை சுமன்தேவன், மருது தேசிய கழக தலைவர் மருதுபாண்டி உள்ளிட்ட பார்வட் ப்ளாக் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்., உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.,
இதே போல் கொக்குளம் ஆறுகரையை சுற்றியுள்ள 11 கிராம ஊராட்சிகளிலும் பி.கே.மூக்கையாத்தேவர் பெயர் சூட்ட கோரி கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும்,

ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினரவும் இருந்த அகில இந்திய பார்வட் ப்ளாக் தலைவரான மறைந்த பி.கே.மூக்கையாத்தேவர், அண்ணா முதல் கலைஞர் கருணாநிதி வரை பதவி பிரமானம் செய்தும் வைத்துள்ளார்.,
அவரது வரலாற்றை போற்றும் வண்ணம் செக்காணூரணி புதிய பேருந்து நிலையத்திற்கு பி.கே.மூக்கையாத்தேவர் பெயரை முதல்வர் சூட்டி, அவர் வரும் நாளிலிலேயே திறந்து வைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் 11 கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து பி.கே.மூக்கையாத்தேவர் பெயரை சூட்ட வைப்போம் என கதிரவன் பேட்டியளித்தார்.,



