கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி தொடங்கபட்டது

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை சில்லறை விற்பனை நிறுவனமான தனிஷ்க், கோவையில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு, ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம் மற்றும் கிராஸ் கட் ரோடு, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனிஷ்க் ஸ்டோர்களில் இந்த பிரத்யேக காதணிகள் கண்காட்சி மற்றும் கோல்டு எக்சேஞ்ச் மேளா நடைபெற்று வருகிறது.
தனிஷ்க் நிறுவனத்தின் கிளஸ்டர் ஹெட் தமிழ்நாடு மெர்சின்டைசிங் சந்தோஷ் இக்கண்காட்சியை தொடங்கி வைத்தார். காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறும் இக்கண்காட்சி, தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். சிறந்த கைவினைத்திறனுடன் உருவாக்கப்பட்ட காதணிகளின் பிரத்யேக வடிவமைப்புகளை ஒரே இடத்தில் பார்வையிடும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இக்கண்காட்சி வழங்குகிறது.

ஒவ்வொரு நகைக்கும் 20% வரை தள்ளுபடி. மேலும், கோல்டு எக்சேஞ்ச் திட்டத்தின் கீழ் 18 காரட் வரையிலான தங்கத்திற்கு 0% Deduction வழங்கப்படுகிறது. முன்பதிவும் செய்து கொள்ளலாம்.



