புதுக்கோட்டையில் இன்று லட்சிய ஜனநாயக கட்சியை அறிமுகப்படுத்த அக்கட்சியின் தலைவரும் பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் வந்திருந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது
இன்று எங்களது கட்சியை புதுக்கோட்டையில் அறிமுகப்படுத்தும் போது புதுக்கோட்டை மாவட்டம் மண்ணின் பெருமையான ரேக்ளா ரேஸ் தொடங்கி வைத்து கட்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.
எங்களது கட்சியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்று சேர்ப்பதற்கு எந்த மாதிரி எல்லாம் செய்யலாம் என்பதற்கான நிகழ்வு தான் இன்று இங்கு நடத்துவது. வரும் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் களம் காண இருக்கிறோம். நீண்ட தொலைநோக்கு பார்வையுடன் கொண்ட தலைவரை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் நிறைய எதிர்பார்த்தார்கள் ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிறைய இருக்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. இந்த ஆட்சியிலும் ஊழல் தொடர்கிறது. இப்போது ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

ஊழலுக்கு பெயர் போனவர் தான் ஆதவ் அர்ஜுனா. இது குறித்து நான் நிறைய முறை சொல்லி இருக்கிறேன். அவர் துறையிலும் ஊழல் குறையவில்லை. அந்தத் துறையில் இருக்கும் குறைகளை சரி செய்யவில்லை. விளையாட்டு வீரர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். உதயநிதியும் இதே வேலையை தான் செய்து கொண்டிருந்தார்.
நமது மக்களுடைய கலாச்சாரமான சிலம்பம் வல்லர் சிலம்பம் ரேக்ளா ஜல்லிக்கட்டு போன்றவற்றை புரமோட் பண்ண வேண்டும்.
ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். இந்தத் துறைகளில் எவ்வளவு கமிஷன் அடிக்கலாம் என்று பார்க்கக் கூடாது. மக்கள் நலனைப் பார்க்க வேண்டும். திமுக அரசு செய்ததைப் போலவே இவர்களும் வெளிநாட்டுக்குச் சென்று வந்து கணக்கு சொல்கிறார்களே தவிர இந்தியாவில் உள்ள கம்பெனிக்கு லண்டனில் போய் ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் கிடையாது.
தவறு செய்பவர்களை விட்டுவிட முடியாது. தமிழ்நாட்டு மக்களுக்கு திமுகவை பிடிக்கவில்லை அதனால் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். ஊழல் நடக்கக்கூடாது என்று மாற்றி ஓட்டு போட்டார்கள் ஆனால் திரும்பத் திரும்ப ஊழல் தான் நடக்கிறது. பட்டினப்பாக்கம் விஷயத்திலும் அந்த மக்கள் விருப்பத்துக்கு தான் செய்ய வேண்டுமே தவிர அதில் தங்களது விருப்பத்தைத் திணிக்க கூடாது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல பாண்டிச்சேரியிலும் சட்டம் ஒழுங்கு சரியாக பின்பற்றப்பட வேண்டும். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற போகும் உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை

நாங்கள் தனியாகத்தான் போட்டியிடப் போகிறோம். தமிழ்நாட்டில் காவேரிக் ஆட்சியில் இப்போது வரை குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றன. எனவே முதலில் சட்ட ஒழுங்கு சரி செய்யப்பட வேண்டும். இனி மழைக்காலம் வரப்போகிறது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்ய வேண்டும்.
நாங்கள் நல்லது செய்கிறோம் என்று நம்பி மக்கள் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். தொடர்ந்து நல்லது செய்வோம். தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழக அரசைப் பொறுத்தமட்டிலும் சட்டசபையில் நிகழ்வுகளை லைவாக மக்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு விஷயம் மட்டும் நல்ல விஷயமாக தெரிகிறது என்றார்.



