விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில், பங்குனி மாத பூக்குழி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. வரும் 21ம் தேதி (செவ்வாய் கிழமை) பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, பெரிய மாரியம்மன் தினமும் ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். நேற்று ‘தவழும் கிருஷ்ணர்’ கோல சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தவழும் கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய மாரியம்மன் சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.