
மதுரை ருக்மணி பாளையத்தில், உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் 103 – வது ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் வழிபாடு செய்தனர். இந்த திருவிளக்கு பூஜையில், திருவெம்பாவை இசைப்பள்ளி குழுவினர்களும், விசாலாக்ஷி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
