• Sat. Apr 27th, 2024

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா 1008 தேங்காய் உடைத்து வழிபாடு:

ByN.Ravi

Feb 24, 2024

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அங்கீகாரம் செய்யப்பட்டதை முன்னிட்டும், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முப்பெரும் விழாவாக கொண்டாடும் வகையில், அதிமுகவினர் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76- ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க வேண்டியும், முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர். பி. உதயகுமார், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டு, சட்டசபையில் அங்கீகரித்து இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாகவும், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோவில் முன்பு 1008 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவரும் கழக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளருமான ராஜேஷ் கண்ணா, அம்மா பேரவை இணைச் செயலாளர் துரை தன்ராஜ், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம். வி. பி. ராஜா,
மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் .கே. முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் க. நாகராஜன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ரகு, மருத்துவர் அணி துணைச்
செயலாளர் கருப்பட்டி கருப்பையா , கலைப்பிரிவு மாவட்டச் செயலாளர் சிவசக்தி,ஒன்றியக் கவுன்சிலர்கள் தென்கரை இராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, பேரூர் கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, வசந்தி கணேசன் சரண்யா கண்ணன், முன்னாள் கவுன்சிலர் தண்டபாணி, இளைஞர் அணி நகரச் செயலாளர் கேபிள் மணி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு, அண்ணா தொழிற்சங்க மதுரை வடக்கு மண்டல இணைச்
செயலாளர் சக்திவேல், பேரூர் நிர்வாகிகள் துரைக்கண்ணன்ஜெயபிரகாஷ், ராஜா அசோக், ஜூஸ் கடை கென்னடி, குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன், விஜய்பாபு,
மன்னாடி மங்கலம் ராஜபாண்டி, முள்ளிப்பள்ளம் சேது, பாண்டியம்மாள், ராமநாதன், வடகாடு பட்டி பிரபு ,பேட்டை முத்துக்குமார், சுரேஷ் ராஜா, மேலக்கால் ராஜபாண்டி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *