

மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண் 75, 76, 77, 78 மற்றும் 199 சார்பாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி, மாணவ தன்னார்வலர்களின் ஏழு நாள் சிறப்பு முகாம் கல்லூரிக்கு அருகாமையிலுள்ள தத்தெடுத்த கிராமங்களான தச்சம்பத்து, நெடுங்குளம், ரிசபம், மேலக்கால் மற்றும் திருவேடகம் ஆகிய கிராமங்களில் 17.02.2024 முதல் 23.02.2024 வரை நடைபெற்றது. இந்
நிகழ்ச்சியினை, கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் மற்றும் அந்தந்த கிராமங்களின் தலைவர்கள் 17.02.2024 அன்று தொடங்கி வைத்தனர். இந்த ஏழு நாட்கள் சிறப்பு முகாமில், அனைத்து அணிகளிலிருந்து மொத்தம் 191 இரண்டாமண்டு இளங்கலை மாணவர்கள் பங்கேற்று, கிராமங்களில் தங்கி சமூக சேவைகள் செய்தனர்.
இதன் மூலம் மாணவர்கள் தங்களின் சேவை மனப்பான்மை, ஆளுமை திறன் குழு செயல்பாடுகளை வளர்த்து கொண்டனர். இம்முகாம் செயல்பாடுகளுக்கான அனுமதி மற்றும் போதிய வசதிகளை கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த மற்றும் காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் படி வழங்கப்பட்டது. மாணவர்களின் சேவையை கிராமத் தலைவர்கள், ஊர் பொது மக்கள் பாராட்டினர்.

இம் முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி 23.02.2024 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.பாண்டி மாணவர்களை சந்தித்து வாழ்த்தி நிறைவு நாளுரை ஆற்றினார். இம் முகாமில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் ஜி. அசோக் குமார், முனைவர் கே. ரமேஷ்குமார், முனைவர் ஜி. ராஜ்குமார், எம். ரகு, முனைவர் என். தினகரன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் முனைவர். பி. மாரிமுத்து, முனைவர். பி. ராஜா, முனைவர். எஸ். செல்வராஜ், முனைவர். வி. குமாரசாமி மற்றும் முனைவர். எஸ். எல்லை ராஜா மாணவர்களுடன் இணைந்து சமூக பணியாற்றி மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.


