• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை..!

Byவிஷா

Apr 18, 2023

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தின் சார்பில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.
திண்டுக்கல் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தின் சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் இருந்து புறப்பட்டது. இதற்கு 24 மனை தெலுங்கு செட்டியார் தலைமை சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் பழனிரோடு, ரதவீதிகள் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலம் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாலை 5 மணி அளவில் திண்டுக்கல் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் அட்சுதா கல்விக்குழும தலைவர் புருஷோத்தமன், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தின் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வெங்கடாசலக்குமார், குணசேகரன், கோவிந்தராஜ், கோபாலகிருஷ்ணன், அழகர், மனோஜ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.