• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலையில் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்புகளும் நம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. நைஜீரியாவில் இருந்து தமிழகத்தில் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் கூடுதலாக 8 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது இன்று தெரிய வந்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு திருவண்ணாமலையில் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை திருவண்ணாமலை ஆட்சியர் அறிவித்து உள்ளார்.