கோடைகாலத்தில் தண்ணீர் பந்தல் போடுவதை கூட பிரம்மாண்டமான செய்தியாக்க போஸ் கொடுக்கும் நட்சத்திரங்கள் பொங்கிவழியும் சினிமா உலகில் திரையில் கொடூரமான வில்லனாக மக்களால் ரசிக்கப்பட்டுவரும் பிரகாஷ்ராஜ் செய்யும் கல்வி உதவிகள் வெளியில் கூறப்படுவதில்லை அப்படி அவர் நிகழ்த்திய சம்பவம் தான் என்ன?

இந்திய திரையுலகில் மொழி கடந்து விரும்பபடும் வில்லனாக, குணசித்திர நடிகராக நடித்து வரும் பிரகாஷ்ராஜ் கால்ஷீட்டுக்காக இப்போதும் பல முன்னணி கதாநாயகர்களின் தேதிகள் மாற்றப்படும் திரையில் கொடூரம் மிக்கவராக காண்பிக்கப்படும் பிரகாஷ்ராஜ் உதவி செய்வதில் மனிதாபிமானம் உள்ள வர் என்பது அவரை நெருக்கமாக அணுகியவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கும் பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்களில் இப்போது நடித்து வருகிறார். சமீபத்தில் பிரகாஷ் ராஜை சந்தித்த இயக்குனர் நவீன்…தந்தையை இழந்த மாணவி மேற்படிப்பை தொடர முடியாமல் சிரமப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
ஸ்ரீசந்தானா என்ற அந்த மாணவி அதிக மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாததால் யுகேயில் உள்ள பல்கலைகழகத்தில் சேர்ந்து படிப்பை தொடர முடியாமல் இருப்பதாக கூறியுள்ளார் உண்மைத்தன்மையை விசாரித்து அறிந்து கொண்ட பிரகாஷ் ராஜ் மாணவியின் படிப்புக்கு உதவியுள்ளார். இப்போது அந்த மாணவி தனது மாஸ்டர் டிகிரியை யுகே பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். அதோடு அங்கேயே வேலை கிடைக்கவும் பிரகாஷ் ராஜ் ஏற்பாடு செய்துள்ளார்.
பிரகாஷ் ராஜ்உதவியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தின் பொருளாதார நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அரிதாக கிடைக்கும் வாய்ப்புகளைக்கூட ஏழ்மையின் காரணமாக எட்ட முடியாத அவர்களுக்கு பிரகாஷ்ராஜ் போன்ற மனிதர்கள் ஒரு கலங்கரை ஒளி. நன்றி சார்” என இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.