• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம்

ByA.Tamilselvan

Oct 9, 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் போல் பூண்டிருக்கும். புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி நாளை திங்கட்கிழமை அதிகாலை 3.09 மணி வரையிலும் உள்ளன. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.