• Tue. Feb 18th, 2025

டிஜிபி-யை சந்தித்த திருமா.. மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்க மனு..

Byகாயத்ரி

Sep 30, 2022

அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், விசிக சார்பில் நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் டிஜிபி-யை நேரில் சந்தித்து மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி மனு அளித்துள்ளனர்.