• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்

ByKalamegam Viswanathan

Jun 3, 2023

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை.பால்குடம், அக்னி சட்டி, புதன்கிழமை பூக்குழியை தொடர்ந்து 13வதுநாள் மண்டகபடியாக வடக்குரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு . நான்கு ரத வீதிகளில் தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது .இதில் வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை தலைவர் , செயலாளர்கள் , பொருளாளர் , மற்றும் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வார்டு கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ரேகா ராமச்சந்திரன் , உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.