• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

இவர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம்-தேவஸ்தானம்

ByA.Tamilselvan

Aug 10, 2022

கூட்ட நெரிசல் காரணமாக மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திருப்பதிக்கு வருவதை தவிர்க்குமாறு தேவஸ்தானம் அறிவிப்பு
வரும் 15-ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவர் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருதுகிறது.
எனவே, தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது. திருமலையில், கோடைகால கூட்ட நெரிசல் குறைந்தாலும் வார இறுதி கூட்டமும், திருவிழா கூட்டமும் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் பக்தர்கள் கூட்டத்திற்கு குறைவிருக்காது.
மேலும் புனித மாதமான புரட்டாசி, செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 17-ம் தேதி தான் முடிவடைகிறது. இந்த மாதத்திலும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதுஎனவே, மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தற்போதைக்கு திருமலைக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தர்கள், தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும், தரிசன வரிசைகளிலும் பொறுமையுடன் காத்திருக்குமாறும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.