• Thu. Apr 24th, 2025

அரசு ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்- சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை!

ByP.Kavitha Kumar

Mar 19, 2025

பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதல்வரின் தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. இந்த நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும் இன்று காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்கவும், அந்த தகவல்களை மனித வள மேலாண்மை துறைக்கு அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.