• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சனாதன தர்மத்திற்கு அழிவில்லை- அண்ணாமலை பேச்சு

ByA.Tamilselvan

Sep 26, 2022

திருப்பூரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை எனஅண்ணாமலை பேச்சு
திருப்பூரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- கடந்த 20 ஆண்டுகளாக புதியதாக ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறார்கள். அந்த கும்பல் ஆன்மீகத்திற்கான ஆதாரம் கேட்கிறார்கள். சனாதனம் பற்றி கேள்வி கேட்கிறார்கள்.சனாதன தர்மத்திற்கு அழிவே கிடையாது. தமிழகத்தில் 20 ஆண்டுகளாக சனாதன தர்மம் குறித்து திரித்து கூறி பொய் கூறி வருகிறார்கள். முதலும் இல்லை முடிவும் இல்லை. எக்காலத்திலும் சனாதன தர்மத்திற்கு அழிவில்லை.5000 ஆண்டுகளாக சனாதன தர்மம் உள்ளது. 20 ஆண்டுகளாக தமிழகத்தில் எதிர்க்க தொடங்கியிருக்கிறார்கள்.
சனாதனத்தை காப்பாற்ற கூடியவர்தான் நாட்டின் காவலனாக இருக்க முடியும். பிரதமர் நரேந்திர மோடி அவ்வாறு இருக்கிறார். சிவனடியார்கள் போல என்னால் இருக்க முடிய வில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டக்கூடிய நிலையில் நான் இல்லை . சத்ரியனாக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் திருப்பூர் ஜெய் நகர் பகுதியில் கல் வீசி தாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பிரபு வீட்டிற்கு அண்ணாமலை சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும் போது, தமிழகம் அமைதி பூங்காவாக மாற காவல்துறை முழு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். தமிழக காவல்துறை தன்னுடைய நடவடிக்கைகளை வேகப்படுத்தும் பட்சத்தில் அடுத்த குற்றம் தடுக்கப்படும் என்றார்.