• Mon. Oct 14th, 2024

வட்டமோ, சதுரமோ வரி கிடையாது; தொழிலதிபருக்கு மத்திய அரசு பதிலடி!

By

Sep 2, 2021 ,

அப்பளம் வட்டமாக இருந்தாலும் சரி, சதுரமாக இருந்தாலும் சரி வரி கிடையாது என்று மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.

தடபுடலான விருந்து சாப்பாடு என்றாலே பெரும்பாலானவர்களுக்கு அப்பளம் இல்லாமல் முழுமை அடையாது. அதனால் தான் கல்யாண வீட்டிலிருந்து ஓட்டல்கள் வரை மதிய சாப்பாட்டிற்கு கட்டாயம் அப்பளம் வைக்கின்றனர். காலத்திற்கு ஏற்ற மாற்றமாக அப்பளமும் பல வடிவங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் அப்பளங்கள் விதவிதமாக தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, ‘வட்ட வடிவில் உள்ள அப்பளத்துக்கு ஜி.எஸ்.டி -யில் இருந்து விலக்கு இருக்கிறது. ஆனால், சதுர வடிவில் இருந்தால் அதற்கு வரி விதிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த லாஜிக்கை புரியவைக்கக் கூடிய சார்ட்டட் அக்கவுன்டன்டை எனக்கு பரிந்துரைக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தார்.

 

இதற்கு மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வர வாரியம் பதில் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், எந்த வடிவில் இருந்தாலும், அப்பளத்துக்கு ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு உண்டு என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *