தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் குரூப்-2 தேர்வு நடைபெற இருக்கிறது தேர்வாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-2, குரூப்-2 ஏ, முதலிய தகுதி தேர்வினை நடத்தி தகுதியான தேர்வாளர்களை அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் தகுதி குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 நடைபெற இருக்கிறது. குரூப்-2 தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. குரூப்-2 தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் குருப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதனையடுத்து குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வின் மூலமாக காலியாக உள்ள 5,529 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. முதல்நிலைத் தேர்வுகள் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகையில் 3 மணி நேரம் நடத்தப்பட உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை 11 லட்சம் பட்டதாரிகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு மைனஸ் மதிப்பெண்ணும் வழங்க இருக்கிறார்கள். விடைத்தாளில் என்னென்ன தவறுகள் செய்தால் எவ்வளவு மதிப்பெண் மைனஸ் மதிப்பெண் என்பதற்கான தகவல் வெளியானது.
குரூப்-2 தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வாளர்கள் யாரும் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.