பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு 34 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே 1988-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி அன்று மூத்த குடிமக்கள் மீது பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவும், சந்து என்பவரும் வாகன விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசரணைக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையின் முடிவில் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
34 ஆண்டு கால வழக்கில் நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை
