• Fri. Mar 29th, 2024

தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் பேட்டி

ஆண்டிபட்டி தேக்கம்பட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 7 இலட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நிழற்குடையை திறந்துவைத்தார் . இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்

கடந்த 2009ஆம் ஆண்டு மதுரை போடி மீட்டர்கேஜ் ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கி தற்போது மதுரையில் இருந்து தேனிவரை பணிகள் முடிவடைந்துள்ளன . கடந்தமாதம் மதுரை தேனி வழித்தடத்தில் சோதனைஓட்டம் நடைபெற்றது . இதையடுத்து மத்தியஅரசு அனுமதிக்காக நிலுவையில் உள்ளது . இன்றைக்கு ரயில்வேதுறை பொதுமேலாளரிடம் இது குறித்து பேசினேன் . இன்னும் ஓரிருநாட்களில் ரயில்வே அமைச்சரை தொடர்புகொண்டு பேசுவேன் . விரைவில் நடைபெற உள்ள ரயில்சேவை தொடக்கவிழாவில் மதுரை அல்லது தேனியில் ரயில்வே அமைச்சர் கலந்து கொள்ளவேண்டும் என கோரிக்கை வைப்பேன் . ஒரு மாதகாலத்தில் ரயில்சேவை துவங்கும் . நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நான் ரயில்வே அமைச்சரிடம் 7 கோரிக்கைகளை கொடுத்தேன் . அதில் மதுரை போடி ரயில் சேவை கோரிக்கை முக்கியமானது . மதுரையில் இருந்து போடிவரை ரயில் சேவை மட்டுமல்லாமல் சென்னையில் இருந்து மதுரை வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் போடிவரை நீட்டிப்பு செய்யவேண்டும் என வலியுறுத்துவேன் . ரயில் சோதனை ஓட்டத்தின்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அது குறித்து மாநிலஅரசிடம் பரிந்துரைசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *