• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தேனி: தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் ரத்ததான முகாம்

தேனி மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ளது, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. நேற்று (ஜன.26) 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.எஸ்., பிரகாஷ் தலைமையில் நடந்த இம்முகாமில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர்கள் அனுமந்தன், பிரியா ஆகியோர் தலைமையில் ரத்த வங்கி குழுவினர் ரத்தம் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒன்றிய, நகர இளைஞரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.