• Sun. Feb 9th, 2025

தேனியில் இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்!..

By

Aug 24, 2021

தேனி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக கோவிட் தடுப்பூசி முகாமை தேனி மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றினை தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் எளிதாக தடுப்பூசியை செலுத்துவதற்காக பிரத்தியோக மையத்தினை ரிப்பன் வெட்டி ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்த மையமானது 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.