தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி மற்றும் காமாட்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், ஊதிய உயர்வு கேட்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தேனி மாவட்ட அனைத்து தூய்மை பணி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பிச்சை முத்து தலைமையில் தமிழக முதல்வருக்கு மனு கொடுப்பதற்காக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர்.