நாடு முழுவதும் நேற்று 75 வது சுதந்திர தின பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த சித்தார்த் தோஷி என்ற இளைஞர் ஒருவர் தனது 71.60 லட்சம் மதிப்பிலான ஆடம்பரமான ஜாகுவார் காருக்கு இந்தியாவின் தேசிய கொடியில் உள்ள மூவரணத்தால் பெயிண்ட் அடித்துள்ளார்.
ஹர் கர் திரங்காஎன்ற பிரசாரத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர் தனது காருக்கு இந்திய தேசிய கொடியின் வர்ணங்களை சுமார் 2 லட்சம் செலவு செய்து பெயிண்ட் அடித்துள்ளார்.அத்துடன் அந்த காரில் சூரத்திலிருந்து டெல்லிக்கு இரண்டு நாட்களில் ஏறக்குறைய 1500 கிலோமீட்டர் பயணம் செய்து செல்லும் வழியெல்லாம் தேசியக்கொடி மற்றும் அவர் பிரசாரத்தைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.