சாலையில் கிடந்த உயர்ரக செல்போன் காவல் நிலையத்தில் இளைஞர் ஒப்படைத்தார்.
மதுரை கோச்சடை மேலகால் மெயின் ரோடு செவன்த் டே மேல்நிலைப்பள்ளி அருகே சரண் என்பவர் வேலை நிமித்தமாக அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சாலையில் உயர்ரக செல்போன் ஒன்று சிம் கார்டு இல்லாமல் இருந்துள்ளது. இதை பார்த்து அவர் சிம்கார்டு இல்லாமல் இருக்கும் செல்போனை என்ன செய்வது என்று தெரியாமல் பைபாஸ் சாலையில் உள்ள சமூக ஆர்வலர் காளமேகம் என்பவரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அறிவுறுத்திலின்படி, மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலையம் குற்றப்பிரிவு காவலர்களிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர் சரண்-னை காவலர்கள் பாராட்டினர். சாலையில் கிடந்த செல்போன் யாருடையது என்று தெரியவில்லை. உரிய அடையாளம் சொல்லி காவல் நிலையத்திற்கு வந்து பெற்று கொள்ளலாம் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சாலையில் கிடந்த உயர்ரக செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்
